ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
அறிமுகமான முதல் படத்திலேயே சக்ஸஸ் ஹீரோ என்கிற அடையாளத்தை பெற்றுவிட்டார் மோகன்லால் மகன் பிரணவ் மோகன்லால். அதை தொடர்ந்து இரண்டாவது படத்திற்காக தயாராகி வரும் பிரணவ், அடுத்ததாக திலீப்பை வைத்து பிளாக்பஸ்டார் ஹிட்டான ராம்லீலா படத்தை இயக்கிய அருண்கோபி டைரக்சனில் நடிக்க இருக்கிறார்.
இந்த படத்தை மிக பிரம்மாண்டமாக தயாரிக்க இருக்கிறார் புலிமுருகன் தயாரிப்பாளர். தற்போது இந்த படத்திற்கு இருபத்தொண்ணாம் நூற்றாண்டு என டைட்டில் வைத்துள்ளார்கள். தேசிய விருது பெற்ற பீட்டர் ஹெயினும், ரசூல் பூக்குட்டியும் இந்த படத்தில் இணைந்துள்ளனர். முப்பது வருடங்களுக்கு முன்பு மோகன்லால் நடித்த சூப்பர் ஹிட் படம் ஒன்றிற்கு இருபதாம் நூற்றாண்டு என டைட்டில் வைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.