தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான வரலாற்றுப்படமான 'பழசிராஜா'விற்கு பிறகு மம்முட்டி நடிப்பில் மீண்டும் மாமாங்கம் என்ற வரலாற்றுப்படம் உருவாகி வருகிறது.. 17ஆம் நூற்றாண்டில் நடைபெறும் கதை இது. சேகவர் என்கிற கேரக்டரில் நடிக்கிறார் மம்முட்டி.. இந்தப்படத்தை சஜீவ் பிள்ளை என்பவர் இயக்கி வருகிறார். இவர் பிரபல எழுத்தாளரும் இயக்குனருமான அடூர் கோபாலகிருஷ்ணனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்..
இந்தப்படத்தில் மம்முட்டி நான்கு வித கேரக்டர்களில் நடிக்கிறார் என சொல்லப்படுகிறது. அதில் ஒன்று பெண் கேரக்டர் என்றும் சொல்லப்பட்டு வந்தது. ஆனால் தற்போது, அது பெண் கேரக்டர் இல்லை என்றும், கொஞ்சநேரம் வரும் ஒரு கேரக்டரில் பெண் தன்மையுடன் மட்டுமே நடிக்கிறார் என்றும் தெரியவந்துள்ளது. இந்தப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தான் கொச்சியில் முடிவடைந்தது.