பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மலையாளத்தில் பிரபல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராகவும், நடிகர் சங்க தலைவராகவும் பொறுப்பு வகித்து வருபவர் நடிகர் இன்னொசன்ட்.. அதுமட்டுமல்ல பார்லிமென்ட் உறுப்பினரும் கூட. கடந்த 2003 முதல் தற்போதுவரை சுமார் 15 வருடம் நடிகர் சங்க தலைவராக ஒவ்வொருமுறையும் போட்டியின்றி ஏகமானாக்கதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமைக்குரியவர்.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்புதான் கேன்சரில் இருந்து மீண்டு வந்த இவர், இம்மாதம் (ஜூன்-24) நடக்கவுள்ள தேர்தலில், தான் மீண்டும் தலைவர் பதவிக்கு நிற்கப்போவதில்லை என அறிவித்துவிட்டார். இன்னொசன்ட் எம்.பியாக இருப்பதால் கூடுதல் பொறுப்புகள் காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. அடுத்த தலைவர் பதவிக்கு மோகன்லால் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.