பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான பிரேமம் படம் மூலம் புகழ் வெளிச்சம் பெற்ற சாய்பல்லவி, மடோனா, அனுபமா பரமேஸ்வரன் ஆகிய மூவருமே அதன்பின் மலையாள திரையுலகை கண்டுகொள்ளவில்லை என்றே சொல்ல வேண்டும். தெலுங்கு, தமிழ் என ஓரளவு பிஸியாகிவிட்ட அவர்களுக்கு மலையாள திரையுலகம் பக்கம் போக விருப்பம் இல்லை போலும். ஆனாலும் தற்போது மடோனா செபாஸ்டியன் மட்டும், தமிழில் குறைவான வாய்ப்புகளே தேடி வருவதால் மலையாள படங்களிலும் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார்.
அந்தவகையில் இரண்டு வருடத்திற்கு முன் மலையாளத்தில் திலீப்புக்கு ஜோடியாக கிங் லையர் படத்தில் நடித்த மடோனா, தற்போது ஆசிப் அலி ஜோடியாக இப்லிஸ் என்கிற படத்தில் நடித்து வருகிறார். வரும் அக்டோபரில் வெளியாக உள்ள இந்தப்படத்தின் வெற்றி தன்னை மலையாள சினிமாவில் மீண்டும் வலம்வர செய்யும் என நம்புகிறார் மடோனா.