ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மளமளவென ஒப்புக்கொண்ட படங்களை முடித்து வரும் மோகன்லால், அந்தவகையில் நீராளி, காயங்குளம் கொச்சுன்னி, ஒடியன் ஆகிய படங்களை முடித்துவிட்டு தற்போது தனது புதிய படத்தின் படப்பிடிப்பிற்காக லண்டன் சென்றுள்ளார். பிரபல மலையாள இயக்குனரும் மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவருமான இயக்குனர் ரஞ்சித் இந்தப்படத்தை இயக்கி வருகிறார்.
இந்தப்படத்திற்கு தற்போது ட்ராமா என பெயர் வைத்து ரம்ஜான் திருநாளை முன்னிட்டு இதன் டைட்டில் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.. ஆனால் இந்த போஸ்டரில் மோகன்லால் படம் இடம் பெறவில்லை என்பது ஆச்சர்யம்.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க லண்டனில் நடைபெற்று வருகிறது. குறுகியகால உருவாகிவரும் இந்தப்படத்தின் படப்பிடிப்பை 45 நாட்களில் முடிக்க திட்டமிட்டுள்ளனர்.