டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் |
தென்னிந்திய டிவிக்களில் முதல் முறையாக விஜய் டிவியில் கடந்த வருடம் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமானது. அதன்பின் தெலுங்கில் ஜுனியர் என்டிஆர் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியும் ஒளிபரப்பாக ஆரம்பித்தது. தமிழ், தெலுங்கில் கடந்த வருடம் ஒளிபரப்பான அந்த இரண்டு நிகழ்ச்சிகளும் மிகவும் பிரபலம் ஆனது.
அதன்பின் பல மாதங்கள் கழித்து தெலுங்கில் பிக் பாஸ் 2 நிகழ்ச்சி நேற்று முதல் ஒளிபரப்பை ஆரம்பித்தது. ஜுனியர் என்டிஆருக்குப் பதிலாக நானி இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார். ஆனால், நேற்று ஆரம்பமான சீசன் 2வில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்களில் பலர் பிரபலம் இல்லாத போட்டியாளர்கள் என்பதால் நிகழ்ச்சி சுவாரசியமே இல்லாமல் ஆரம்பமாகியுள்ளது.
பங்கேற்றுள்ள போட்டியாளர்களில் அதிக பிரபலம் என்று சொன்னால் நடிகர் தனிஷ், நடிகை தேஜஸ்வி ஆகியோரை மட்டுமே சொல்லலாம். இதில் தேஜஸ்வி நட்பதிகாரம் 79 என்ற தமிழ்ப் படத்தில் நடித்திருக்கிறார். 20 தெலுங்குப் படங்கள் வரை நடித்திருக்கிறார். அதே சமயம் முன்னணி ஹீரோயின் என்றும் சொல்ல முடியாது. நடிகர் தனிஷ் ஓரளவிற்குப் பிரபலமானவர், ஆனால் முன்னணி ஹீரோவெல்லாம் கிடையாது.
மற்ற போட்டியாளர்கள் அதிக பிரபலம் இல்லாதவர்கள் என்பதால் எந்த விறுவிறுப்பும் இல்லாமல்தான் முதல் நாள் நிகழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது. வழக்கம் போல் ஏதாவது நாடகத்தை நடத்தித்தான் நிகழ்ச்சியை பிரபலப்படுத்துவார்கள் போலிருக்கிறது.
தமிழில் பிக்பாஸ் 2 நிகழ்ச்சி வரும் ஞாயிறு, ஜுன் 17ம் தேதியன்று ஆரம்பமாக உள்ளது.