மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் |
பாஸ்கர் ஒரு ராஸ்கல் படம் ஒருவழியாக ரிலீசானதில் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ள மலையாள இயக்குனர் சித்திக், அடுத்ததாக மலையாளத்தில் தனது புதிய பட வேலைகளில் இறங்கிவிட்டார். இந்தமுறை இவரது படத்தில் ஹீரோவாக நடிக்க இருக்கிறார் மோகன்லால். இத்தனை வருடங்களில் மோகன்லாலை வைத்து வியட்நாம் காலனி மற்றும் லேடீஸ் அன்ட் ஜென்டில்மேன் என இரண்டே படங்களை மட்டுமே இயக்கியுள்ளார் சித்திக்.
தற்போது ஐந்து வருடங்கள் கழித்து மீண்டும் மோகன்லால் படத்தை இயக்கவுள்ளார் சித்திக். ஆக்சனுடன் காமெடியும் கலந்த படமாக இது உருவாக இருக்கிறது. மம்முட்டியை வைத்தே பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்துள்ள சித்திக், மோகன்லாலுக்கு அந்த அளவு ஹிட் கொடுக்கவில்லை என்கிற மோகன்லால் ரசிகர்களின் மனக்குறையை இந்தப்படத்தில் சித்திக் தீர்த்து வைப்பார் என எதிர்பார்க்கலாம்.