'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
இனி வரும் நாட்களில் மலையாள சினிமாவை மிக பிரமாண்டமான புராண படங்களும் வரலாற்று படங்களும் ஆக்கிரமிக்க இருக்கின்றன. மோகன்லால், மம்முட்டி, பிருத்விராஜ் என ஜாம்பவான் நடிகர்கள் தான் இந்த முயற்சியில் இறங்கியுள்ளனர். அந்தவரிசையில் முதலாவதாக வெளியாக தயாராகி வருகிறது மம்முட்டி நடித்துவரும் 'மாமாங்கம்' படம்.
சுமார் 30 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக இருக்கும் இந்தப்படத்தை அடூர் கோபாலகிருஷ்ணனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சஜீவ் பிள்ளை என்பவர் இயக்குகிறார்.. 17ஆம் நூற்றாண்டில் நடைபெறும் இந்த கதையில் சேகவர் என்கிற கேரக்டரில் நடிக்கிறார் மம்முட்டி.
கடந்த பிப்ரவரி மாதம் மங்களூரில் துவங்கிய இதன் முதற்கட்ட படப்பிடிப்பு 15 நாட்கள் நடந்தநிலையில் நிறைவு பெற்றது. தற்போது சில தினங்களுக்கு முன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கொச்சியில் தொடங்கியுள்ளது.. இன்றுமுதல் இந்த இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் இணைந்துள்ளார் மம்முட்டி.