ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
அஞ்சலி புகழ் ஷாம்லி குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தபோது பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர். ஆனால் கதாநாயகியாக அவர் தெலுங்கில் அறிமுகமான ஒய் என்ற படம் படுதோல்வியடைந்து விட்டது. இந்த படத்தில் பாய்ஸ் சித்தார்த் நாயகன்.
அதன்காரணமாக பின்னர் படவாய்ப்புகள் இல்லாமல் வெளிநாட்டிற்கு படிக்க சென்று விட்ட ஷாம்லி, அதையடுத்து விக்ரம் பிரபுவுடன் வீரசிவாஜி என்ற படத்தில் நடித்தார். அந்த படமும் தோல்வியடைந்து விட்டது. அதனால் அடுத்தபடியாக தமிழில் படவாய்ப்புகள் இல்லை.
இந்த நிலையில், தற்போது மீண்டும் தெலுங்கில் அம்மம்மா ஹரிலு என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் சாய் பல்லவி நடித்த தியா படத்தில் நடித்த நாக செளரியா நாயகனாக நடித்துள்ளார். சுந்தர் சூர்யா இயக்கியுள்ள இந்த படம் இன்று வெளியாகிறது. இந்த படமாவது வெற்றி பெற்று தன்னை காப்பாற்றுமா? என்கிற எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார் ஷாம்லி.