ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
மலையாள சினிமாவில் இந்த வருடம் இளம் நடிகர் டொவினோ தாமஸின் வருடமாகத்தான் இருக்கப்போகிறது.. அந்த அளவுக்கு கைநிறைய படங்கள், அதிலும் முக்கியமான படங்களில் நடித்து வருகிறார் டொவினோ தாமஸ். இவர் நடித்து இருமொழிப்படமாக உருவாகியுள்ள அபியும் அனுவும் படம் நாளை மறுநாள் (மே-25) வெளியாக இருக்கிறது. பியா கதாநாயகியாக நடித்துள்ள இந்தப்படத்தை பிரபல பெண் ஒளிப்பதிவாளர் பி.ஆர்.விஜயலட்சுமி இயக்கியுள்ளார்.
இந்தநிலையில் மலையாளத்தில் டொவினோ நடித்துள்ள மரடோனா படம் இறுதிக்கட்ட பணிகள் முடிந்து ஜூன்-22ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தை தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் தயாரிக்கிறது என ஆரம்பத்தில் சொல்லப்பட்ட நிலையில் சமீபகாலமாக அந்த நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தாமல் மினி ஸ்டுடியோ என்கிற நிறுவனம் தயாரிப்பதாக விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது. இதே டொவினோ தாமஸ் தான் தனுஷின் மாரி -2 படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.