'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
திருமணத்திற்குப்பின் படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்ட நடிகை பூமிகா மீண்டும் சினிமாவில் ஒரு ரவுண்டு வர தயாராகிவிட்டார் கதாநாயகியாக இல்லாவிட்டாலும் கதையின் நாயகியாக தேடிவரும் கேரக்டர்களை ஏற்றுக்கொள்ளும் அவர் தமிழ், தெலுங்கில் உருவாகி வரும் கன்னட 'யூ டர்ன்' பட ரீமேக்கில் நடித்து வருகிறார். இதுதவிர தெலுங்கிலும், ஹிந்தியிலும் தலா ஒரு படத்தில் நடித்து வருகிறார் பூமிகா.
இந்தநிலையில் தெலுங்கில் மறைந்த முதல்வர் ஒய்.எஸ்.ஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாறாக உருவாக உள்ள 'யாத்ரா' என்கிற படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார் பூமிகா. மகி ராகவ் என்பவர் இயக்கும் இந்தப்படத்தில் ஒய்.எஸ்.ஆராக மம்முட்டி நடிக்க, அவரது மகள் ஒய்.எஸ்.ஷர்மிளா கேரக்டரில் நடிக்கிறாராம் பூமிகா.
ஒய்.எஸ்.ஆரின் மகன் ஜெகன்மோகன் ரெட்டி கேரக்டரில் சூர்யா நடிக்க உள்ளதாக சொல்லப்பட்டு வருகிறது. அந்தவகையில் ஒரு காலத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக 'சில்லுனு ஒரு காதல்' படத்தில் நடித்த பூமிகா, இந்தப்படத்தில் அவருக்கு சகோதரியாக நடிக்கிறார் என்பது ஆச்சர்யமான விஷயம்.