ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சினிமாவில் அவ்வப்போது பரிசோதனை முயற்சியாக, சாதனைக்காக சில படங்கள் எடுக்கப்படுவது உண்டு. அந்தவகையில் மலையாளத்தில் '2 டேய்ஸ்' என்கிற படத்தை எந்தவித கட்டுமின்றி சிங்கிள் ஷாட்டில் படமாக்கி சாதனை படைத்துள்ளனர். நிஷார் என்பவர் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.
சமுத்திரக்கனி இந்தப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.. நடிகர் ரியாஸ்கானும், சமுத்திரகனி படங்களில் தவறாமல் இடம்பிடிக்கும் அனில் முரளியும் இதில் நடித்துள்ளனர்.
இந்தப்படத்தில் சோஷியல் மீடியா மூலமாக இளம்பெண்கள் நால்வர் எப்படிப்பட்ட அபாயகரமான வலையில் சிக்குகின்றனர் என்பதையும் அவர்களை சமுத்திரக்கனி எப்படி மீட்கின்றார் என்பதையும் கதைக்களமாக்கி இருகின்றனராம்.
இந்தப்படம் கேரளாவில் நேற்று வெளியாகியுள்ளது. தமிழிலும் இதேபோல 5 வருடங்களுக்கு முன்பு 'அகடம்' என்கிற படம் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டு கின்னஸ் சாதனையில் இடம்பிடித்தது குறிப்பிடத்தக்கது.