இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பிருத்விராஜ் தனியாக தயாரிப்பு நிறுவனம் துவங்கி, அதன்மூலம் தயாரித்து தானே ஹீரோவாக நடிக்கும் படம் தான் '9 அக நைன்'. ஒன்பது நாட்களில் நடக்கும் சம்பவங்களை கொண்டு இந்த கதை உருவாக்கப்பட்டுள்ளதாம். இதில் பிருத்விராஜ் விஞ்ஞானியாக நடிக்கிறாராம். சயின்ஸ் பிக்சன் த்ரில்லராக உருவாகும் இந்தப்படத்தை ஜென்யூஸ் முகமது என்பவர் இயக்குகிறார்.
இவர் துல்கர் சல்மான் - நித்யா மேனன் நடித்த '100 டேய்ஸ் ஆப் லவ்' என்கிற படத்தை இயக்கியவர். இதில் கதாநாயகிகளாக நித்யா மேனன் மற்றும் பார்வதி ஆகியோர் நடிக்க உள்ளதாக சொல்லப்பட்டு வந்த நிலையில் 'கோதா' புகழ் வாமிகா கபி கதாநாயகியாக நடிக்க இருக்கிறார் என படக்குழுவினர் தரப்பில் சொல்லப்படுகிறது. அதை உறுதிப்படுத்தும் விதமாக விரைவில் ஒரு மலையாள படத்தில் ஒப்பந்தம் செய்யப்போகிறேன் என வாமிகாவும் குறிப்பிட்டிருந்தார்.