தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் தனது சொந்தக்குரலில் ஒரு பாடலையாவது பாடிவிட வேண்டும் என்கிற ஆசை சூப்பர்ஸ்டார் வரை உண்டு. அதற்கு நடிகர் மம்முட்டியும் விதிவிலக்கல்ல. தற்போது தான் நடித்துள்ள 'அங்கிள்' படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார் மம்முட்டி. இந்தப்படம் நாளை வெளியாக இருக்கிறது.
1995ல் 'மழையெத்தும் முன்பே' படத்தில் முதன்முதலாக பாடிய மம்முட்டி, அதன்பின் தனியாகவும், சிலருடன் இணைந்தும் இதுவரை எட்டு பாடல்கள் பாடியுள்ளார்.. கடைசியாக ஆறு ஆண்டுகளுக்கு முன் 'ஜவான் ஆப் வெள்ளிமல' படத்தில் பாடியிருந்தார் மம்முட்டி.
இப்போது பாடியுள்ளது ஒன்பதாவது பாடல். இதற்கு முன் மூன்றுமுறை மம்முட்டியை தனது இசையில் பாடவைத்த இசையமைப்பாளர் பிஜிபால் தான் இந்தப்படத்திலும் மம்முட்டியை பாட வைத்துள்ளார்.