ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் |
பிரேமம்' படம் வெளியாகி கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஓடிவிட்டன.. படத்தில் அல்போன்ஸ் புத்ரன் அறிமுகப்படுத்திய, சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன், அனுபமா பரமேஸ்வரன் என மூன்று கதாநாயகிகளும் இன்று ரசிகர்களிடையே பிரபலமாகிவிட்டார்கள்.
அதேபோல நாயகன் நிவின்பாலியின் நண்பர்களாக நடித்த ஷிஜூ வில்சன், கிருஷ்ணசங்கர், ஷராபுதீன் ஆகியோரும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகின்றனர். இதில் ஷிஜூ வில்சன், ஷராபுதீன் இருவரும் இணைந்து நடித்த 'ஹேப்பி வெட்டிங்ஸ்' படம் நூறு நாட்கள் ஓடியதால் ரசிகர்களிடம் அவர்கள் பரவலான அறிமுகம் பெற்றுள்ளார்கள்..
தவிர மோகன்லால் மகன் பிரணவ் ஹீரோவாக நடித்த ஆதி படத்தில் மிரட்டலான வில்லனாகவும் தன்னை வெளிப்படுத்திக்கொண்டார் ஷிஜூ வில்சன்.. ஷராபுதீன் காமெடி ஏரியாவை பிடித்துக்கொண்டார். இதில் கிருஷ்ண சங்கர் தான் ஹீரோவாக நடிப்பதா, காமெடியனாக மாறுவதா என குழப்பத்தில் இருக்கிறார்.
தற்போது அல்போன்ஸ் புத்ரன் தயாரிப்பில் உருவாகியுள்ள 'தொபமா' என்கிற படத்தில் ஷிஜூ வில்சன், கிருஷ்ண சங்கர், ஷராபுதீன் மற்றும் சபரீஷ் வர்மா ஆகிய நால்வரும் தான் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். இந்தப்படத்தின் வெற்றியும் தனக்கு கிடைக்கும் வரவேற்பும் தான் தனது எதிர்காலத்தை தீர்மானிக்கும் என நம்பிக்கையுடன் இருக்கிறார் கிருஷ்ண சங்கர்.