அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் |
தனக்குள் ஒளிந்திருக்கும் நடிகனுக்காக அவ்வப்போது சில படங்களிலே சின்னச்சின்ன வேடங்களில் தலை காட்டுவார் கவுதம் மேனன்.. தற்போது மலையாளத்தில் 'நாம்' என்கிற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் கவுதம் மேனன். அறிமுக இயக்குனர் ஜோஷி தாமஸ் இயக்கியுள்ள இந்தப்படத்திலும் அவர் இயக்குனர் கவுதம் மேனனாகவே நடித்திருக்கிறாராம்.
அதுமட்டுமல்ல நடிகர்கள் வினீத் சீனிவாசனும், டொவினோ தாமஸும் கூட நடிகர்களாகவே சில காட்சிகளில் நடித்துள்ளார்களாம். இவர்கள் மூவரும் இடம்பெறும் விதமாக டிரைலர் ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார்கள். காயத்ரி சுரேஷ் கதாநாயகியாக நடித்துள்ள இந்தப்படம் வரும் மே-10 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.
இதற்கு முன்பே 'ஜேக்கப்பிண்டே சுவர்க்க ராஜ்யம்' படத்தில் நிவின்பாலியின் தந்தையாக நடிக்கும் வாய்ப்பு அவரை தேடி வந்தது, ஆனால் படப்பிடிப்பு முழுவதும் வெளிநாட்டில் நடந்ததால் அதில் கவுதம் மேனன் நடிக்க முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது.