இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் |
தமிழ் மற்றும் தெலுங்கு டிவிக்களில் கடந்த வருடம் புதிதாக அறிமுகமான 'பிக் பாஸ்' நிகழ்ச்சிக்கு பெரும் வரவேற்பு இருந்தது. தமிழில் நடிகர் கமல்ஹாசனும், தெலுங்கில் நடிகர் ஜுனியர் என்டிஆரும் தொகுத்து வழங்கினார்கள். புதிய கான்செப்ட் என்பதால் இரண்டு மொழிகளிலும் பெரிய வெற்றியை இந்த நிகழ்ச்சி பெற்றது.
முதல் சீசன் முடிந்த பிறகு இரண்டாவது சீசன் உடனே ஆரம்பமாகவில்லை. தமிழில் கமல்ஹாசன் அரசியல் கட்சி ஆரம்பித்து பிசியாகிவிட்டார். தெலுங்கில் ஜுனியர் என்டிஆர் இரண்டாவது சீசன் தொகுத்து வழங்க மறுத்துவிட்டார். அதனால், தெலுங்கில் இளம் நடிகரான நானியை தொகுத்து வழங்க பேசி வந்தார்கள். அவரும் சம்மதித்துள்ளார். நிகழ்ச்சிக்காக நானிக்கு 3.5 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஒரு படத்திற்கு 60 நாட்கள் கால்ஷீட் கொடுத்து 7 கோடி ரூபாய் வரை நானி சம்பளம் வாங்குகிறாராம். 'பிக் பாஸ் 2' சீசனுக்காக 30 நாட்கள் கால்ஷீட் தர உள்ளார் நானி. அதற்காக அவருக்கு 3.5 கோடி சம்பளம் தர பிக் பாஸ் தயாரிப்பாளர்கள் சம்மதம் தெரிவித்துள்ளார்களாம்.
கடந்த முறை புனேவில் நடந்த தெலுங்கு பிக் பாஸ் படப்பிடிப்பு இந்த முறை ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது.