‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
மலையாள நட்சத்திரங்கள் திலீப் மற்றும் மஞ்சு வாரியர் இருவரும் காதல் திருமணம் செய்துகொண்டு, சில வருடங்களுக்கு முன் கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்று பிரிந்தார்கள். அதன்பின் அவர்கள் நடிக்கும் படங்கள் ஒரே தேதியில் ரிலீசாகும்போது மட்டும் பரபரப்பு எழும்.. அந்தவகையில் கடந்த வாரம் திலீப் நடித்த 'கம்மார சம்பவம்' படமும் மஞ்சு வாரியர் நடித்த 'மோகன்லால்' படமும் ஒரே நாளில் ரிலீசாகின.
'கம்மார சம்பவம்' படத்தில் நடிகர் திலீப் மூன்றுவிதமான காலகட்டங்களில் மூன்றுவிதமான கெட்டப்புகளில் நடித்துள்ளார்.. இதில் ஆச்சர்யம் என்னவென்றால், மஞ்சு வாரியரும் தற்போது மோகன்லாலுடன் தான் நடித்துவரும் 'ஒடியன்' படத்தில் மூன்றுவிதமான கெட்டப்புகளில் நடித்துள்ளார். காரணம் இந்தப்படமும் மூன்றுவிதமான காலகட்டங்களில் நடக்கிறதாம்.