இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
மலையாள இளம் முன்னணி இயக்குனர் வினீத் சீனிவாசனின் தம்பி தான் தயன் சீனிவாசன். நடிகரான இவர், தற்போது இயக்குனராக மாறி இயக்கவுள்ள படம் தான் 'லவ் ஆக்சன் டிராமா' நிவின்பாலி ஹீரோவாக நடிக்கும் இந்தப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார்.
நிவின் - தயன் - வினீத் சீனிவாசன் கூட்டணியில் எப்போதுமே முக்கியமான ஆளாக கருதப்படும் அஜூ வர்கீஸ் இந்தப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பதுடன் தயாரிக்கிறார். ஏப்ரல் மாதம் துவங்குவதாக இருந்த படம் நிவின்பாலிக்கு காலில் காயம்பட்ட காரணத்தால் மே மாதம் துவங்க இருக்கிறது.
இந்தநிலையில் இந்தப்படத்தின் சாட்டிலைட் உரிமையை மிகப்பெரிய தொகைக்கு இப்போதே கைப்பற்றியுள்ளது பிரபல ஆசியாநெட் சேனல். அதுமட்டுமல்ல, இந்தபடம் ரிலீஸாகி, 3௦ தியேட்டர்களில் 25 நாட்கள் ஓடினால், இப்போது பேசப்பட்டுள்ள தொகையை விட இன்னும் கூடுதலான தொகை கொடுப்பதாகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாம்.