‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா |
நடிகர் திலீப் நடிகை வழக்கில் சிக்கி கைதாகி சிறைசென்று வந்தது ஒரு பக்கம் இருக்கட்டும், இன்னொரு பக்கம் அவர் சிறை செல்லும் முன்னும் பின்னும் அவர் நடித்த, நடிக்கின்ற படங்களில் எல்லாம் அவர் குற்றவாளியாக, கைதியாக அமருவது போலவும் சிறைத்தண்டனை அனுபவிப்பது போலவும் கேரக்டர் அமைந்து வருவதுதான் விசித்திரம்.
2016-ல் வெளியான 'வெல்கம் டூ சென்ட்ரல் ஜெயில் படத்தில் முக்கால்வாசி நேரம் சிறைக்கைதியாகவே நடித்திருந்தார் திலீப்.. கடந்த வருடம் வெளியான் ராம்லீலா படத்தில் போலீசாரால் தேடப்படும் குற்றவாளியாக நடித்திருந்தார். தற்போது நடித்து வரும் கம்மார சம்பவம் படத்தில் மூன்று கெட்டப்புகளில் நடிக்கும் திலீப், அதில் இளம் வயது கேரக்டரில் புரட்சியாளராக இருந்து சிறைசென்று வருபவராகவும் நடித்துள்ளார்.