பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ஜெயராமின் மகன் காளிதாஸ் நடித்த முதல் படமான ஒரு பக்க கதை-யில் நாயகியாக நடித்தவர் மேகா ஆகாஷ். அந்த படம் இன்னும் திரைக்கு வரவில்லை. அதன்பிறகு கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் எனை நோக்கி பாயும் தோட்டாவில் நாயகியானார். ஆனால் அந்தபடமும் இன்னும் வெளியாகவில்லை.
தெலுங்கு சினிமாவிற்கு சென்று லை என்றொரு படத்தில் நடித்தார். அந்த படம்தான் மேகா ஆகாஷின் முதல் படமாக வெளியானது. ஆனால் அப்படம் வெற்றி பெறவில்லை. இருப்பினும் அதையடுத்து சல் மோகன் ரங்கா என்ற படத்தில் நடித்து வந்தார் மேகா ஆகாஷ். அந்த படம் தற்போது வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால், இந்த படமும் பாக்ஸ் ஆபீசில் வசூலிக்கவில்லை. ஆக, திரைக்கு வந்த இரண்டாவது தெலுங்கு படமும் தோல்விப்படமாகி விட்டதால் கடும் அதிர்ச்சியடைந்துள்ளார் மேகா ஆகாஷ்.