பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
நடிகர் சித்தார்த் முதன்முறையாக மலையாளத்தில் நடித்துள்ள படம் 'கம்மார சம்பவம்'.. திலீப் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தில் திலீப்புக்கு இணையாக இன்னொரு நாயகனாக நடித்துள்ளார் சித்தார்த். இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட சித்தார்த், திலீப் பற்றி குறிப்பிடும்போது 'ராட்சச நடிகன்' என புகழாரம் சூட்டினார்.
“திலீப்புடன் கடந்த பத்து மாதங்களாக இணைந்து நடித்துள்ளேன்.. சினிமாவை மட்டுமே சுவாசிக்க கூடிய ஒரு மனிதர். அவருடன் நடிக்கும்போது எதிரில் நிற்பவர்களையும் தூக்கி சாப்பிட்டுவிடக்கூடிய ராட்சச நடிகன்..” என பாராட்டினார்.
ரதீஷ் அம்பாட் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படம் சித்திரை விஷுவில் ரிலீஸாக வேண்டும் என விழாவிலேயே உறுதியாக அறிவித்துவிட்டார் திலீப்.