ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
மலையாள திரையுலகில் வழக்கமான கதாநாயகிகளில் இருந்து முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் அனுஸ்ரீ... முழுப்படமாக இருந்தாலும் சரி, ஒரே ஒரு காட்சியில் வந்துபோனாலும் சரி, நடிப்பில் அழுத்தமாக முத்திரை பதிப்பவர்.. சமீப நாட்களாக இவரை சோஷியல் மீடியாவில் பலரும் 'சங்கி' (சங் பரிவார்) என கிண்டல் செய்து வருகிறார்கள்..
காரணம் சமீபத்தில் இவர் அருகில் உள்ள பாலகோகுலம் என்கிற அமைப்பு நடத்திய ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி ஊர்வலத்தில் கிருஷ்ணனின் ராதையாக வேடமிட்டு கலந்துகொண்டார். அதுமட்டுமல்ல அருகில் கோவிலுக்கு தவறாமல் சென்று விசேஷ நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். அதனால் இவரை சங் பரிவாரை சேர்ந்தவர் என அழைக்கும் விதமாக சங்கி என கிண்டலடித்து வருகின்றனர்.
ஆனால் அனுஸ்ரீயோ, “பாலகோகுலம் அமைப்பில் சிறுவயதில் இருந்து இருக்கிறேன்.. ஆனால் அதற்காக நான் ஒன்றும் சங்கி அல்ல.. என் வீட்டின் அருகிலேயே கோவில் உள்ளதால் அடிக்கடி செல்கிறேன்.. பக்கத்திலேயே சர்ச் இருந்தால் அதற்கும் செல்வேன்.. நான் எந்த கட்சியை சேர்ந்தவளும் அல்ல” என சூடாக பதிலடி கொடுத்துள்ளார்.