இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தமிழில் சசிகுமாருடன் வெற்றிவேல், கிடாரி என இரண்டு படங்களில் கதாநாயகியாக நடித்தவர் மலையாள நடிகை நிகிலா விமல்.. இந்த படங்கள் ரசிகர்களிடம் ஓரளவுக்கு ரீச்சானதால் நிகிலா விமலும் கவனம் பெற்றார். ஆனால் அதை தொடர்ந்து அவர் எதிர்பார்த்தபடி வாய்ப்புகள் எதுவும் வரவில்லை.
தற்போது சிபிராஜ் ஜோடியாக நடிக்கும் ரங்கா படம் மட்டுமே அவரது கைவசம் உள்ளது. இந்தநிலையில் மலையாளத்தில் வினீத் சீனிவாசனுக்கு ஜோடியாக 'அரவிந்தண்டே அதிதிகள்' என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் நிகிலா விமல். விரைவில் இந்தப்படமும் வெளியாக இருக்கிறது.
கதையம்சத்துடன் கூடிய படம் என்பதால் இது நிச்சயம் ஹிட்டாகும் என நம்பிக்கையில் இருக்கும் நிகிலா விமல், லட்சுமி மேனன், அமலாபால், கீர்த்தி சுரேஷை போல தாய்மொழியான மலையாளத்தை சுத்தமாக மறந்துவிடாமல், அங்கேயும் அடுத்தடுத்த வாய்ப்புகளை குறிவைத்து நகர்கிறாராம்.