அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் |
எந்த கேரக்டர் கொடுத்தாலும் அதை மெருகேற்றும் நடிப்பை கொடுக்க கூடியவர் தான் மலையாள குணச்சித்திர நடிகை லேனா. வயது குறைவுதான் என்றாலும் கூட, பத்து வயது பையனுக்கு அம்மாவாக நடித்தது முதல் நடிகர் பிருத்விராஜூக்கு கூட அம்மாவாக நடித்துவிட்டார். தமிழில் அநேகன் படத்தில் டாக்டராக நடித்திருந்தார் லேனா
சமீபத்தில் இவர் நடித்த இறா என்கிற படம் வெளியானது. இந்தநிலையில் பழனிக்கு சென்று முருகனை தரிசித்த இவர், நேர்த்தி கடனாக மொட்டை அடித்து முடி காணிக்கை செலுத்தியுள்ளார். மொட்டைத்தலை தோற்றத்தில் இருக்கும் தனது புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட அது செம வைரல் ஆகியுள்ளது.
சிலர் இது அடுத்த படத்திற்கான கெட்டப்பா என கேட்க, ஏன் பழனிமலை முருகன் என ஒருவர் இருப்பதை மறந்துவிட்டீர்களா என பதில் கேள்வி கேட்டு திகைக்க வைத்துள்ளார் லேனா.