ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பாகுபலி படத்தில் 'மனோகரி' பாடலுக்கு நடனம் ஆடியவர் நோரா பதேஹி. தமிழில் தோழா படத்திலும் ஒரு பாடல் ஆடியுள்ள இவர் பாலிவுட்டில் ஐட்டம் டான்ஸுக்கு பெயர்பெற்றவர். தமிழ், தெலுங்கை தொடர்ந்து தற்போது நிவின்பாலி நடிக்கும் 'காயம்குளம் கொச்சுன்னி' படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவதன் மூலமாக மலையாள திரையுலகிலும் நுழைந்துள்ளார்.
இந்தப்படம் பதினெட்டாம் நூற்றாண்டில் நிகழும் கதை என்பதால் ஆங்கிலேயர், போர்ச்சுக்கீசியர் ஆகியோர் திரளாக கலந்துகொள்ளும் கூட்டத்தில் அந்தக்கால பின்னணியில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுகிறாராம் நோரா பதேஹி.. தற்போது காயம் காரணமாக நிவின்பாலி ஓய்வில் இருப்பதால் இவர் சம்பந்தப்பட்ட பாடல் காட்சிகளை படமாக்கி வருகிறாராம் இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ்.