ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நேரம், பிரமேம் என இரண்டு ஹிட் படங்களை கொடுத்துவிட்டு, கடந்த மூன்று ஆண்டுகளாகவே அடுத்த படம் எதுவும் இயக்காமல் அமைதி காத்து வருகிறார் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது அடுத்த படம் தமிழில் தான் என்று சொன்னவர் அந்தப்படம் ஒரு மியூசிக்கல் சப்ஜெக்ட் என்றும் லைட்டாக கோடிட்டு காட்டியிருந்தார்.
இந்தப்படத்தில் சித்தார்த்தும், காளிதாஸ் ஜெயராமும் கதாநாயகர்களாக இணைந்து நடிக்கிறார்கள் என்றும் சொல்லப்பட்டது. இந்த நிலையில் சமீபத்தில் வெளியான தனது 'பூமரம்' படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட காளிதாஸ், அல்போன்ஸ் புத்ரன் படத்தில் நடிப்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
இன்னொரு ஹீரோவாக சித்தார்த் நடிக்கிறாரா என்கிற தகவல் மட்டும் இன்னும் உறுதிப்படுத்தப்படாமல் இருக்கிறது.