ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மறைந்த நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு கதையில் தெலுங்கில் உருவாகி வரும் படம் மகாநதி. இந்த படம் தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரில் வெளியாகிறது. நாக் அஸ்வின் இயக்கும் இந்த படத்தில் சாவித்ரி வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இதுவரை ரொமான்டிக் நாயகியாக மட்டுமே நடித்து வந்துள்ள அவர் முதன் முறையாக ஒரு அழுத்தமான ரோலில் நடித்துள்ளார்.
இந்த படத்திற்காக ஒவ்வொரு நாளும் 3 மணி நேரத்திற்கு மேலாக மேக்கப் போட்டு, பல முறை ரிகர்சல் பார்த்து நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், இந்த படம் எனது சினிமா கேரியரில் மறக்க முடியாத படமாக இருக்கும் என்கிறார்.
மேலும், சமந்தாவும் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த மகாநதி படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது நடந்து வருகிறது. இப்படத்தை மே 9-ந்தேதி வெளியிட இருப்பதாக அப்படத்தை தயாரித்துள்ள வைஜெயந்தி முவீஸ் அறிவித்துள்ளது.