அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
தெலுங்கில் வெளியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் பாகத்தை ஜூனியர் என்டிஆர் தொகுத்து வழங்கினார். முதல்நாள் ஷோவில் சூப்பர் நடனமாடியபடி அந்த நிகழ்ச்சிக்கு நல்லதொரு ஓப்பனிங்கை கொடுத்த அவர், பின்னர் நிகழ்ச்சியை கலகலப்பாக நடத்தினார்.
இந்த நிலையில், தெலுங்கு பிக்பாஸ்-2நிகழ்ச்சி ஜூன் மாதம் முதல் தொடங்குகிறது. ஆனால் இரண்டாம் பாகத்தை நடத்திய ஜூனியர் என்டிஆரை அணுகியபோது, தான் சினிமாவில் பிசியாக இருப்பதால் தன்னால் இயலாது என்று மறுத்து விட்டாராம்.
அதனால் இப்போது நானி அந்த நிகழ்ச்சியில் ஒப்பந்தமாகியிருக்கிறார். தற்போது நானி நடித்து வரும் கிருஷ்ணார்ஜூனா யுத்தம் கோடை விடு முறையில் வெளியாகும் நிலையில், ஜூன் மாதம் முதல் பிக்பாஸ்-2நிகழ்ச்சியை நடத்துகிறார். மேலும் சினிமாவில் நடிகராவதற்கு முன்பு நானி ஆர்.ஜேவாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.