ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஒருபக்கம் பிஸியாக நடித்துக்கொண்டு இருந்தாலும் கடந்த சில ஆண்டுகளாக ஆகஸ்ட் சினிமாஸ் தயாரிப்பு நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவராக இருந்து படங்களை தயாரித்து வந்தார் நடிகர் பிருத்விராஜ். சில காரணங்களால் கடந்த ஆண்டு அந்த நிறுவனத்தில் இருந்து விலகிக்கொண்டார்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் தன் மனைவியுடன் சேர்ந்து 'பிருத்விராஜ் புரொடக்சன்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கியுள்ளார். இதன் அடுத்தகட்ட நடவடிக்கையாக படங்களை தயாரிப்பதிலும் வெளியிடுவதிலும் சோனி பிக்சர்ஸ் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்துள்ளார் பிருத்விராஜ்.
சமீபத்தில் மும்பை சென்று சோனி பிக்சர்ஸ் நிறுவனத்தின் மானேஜிங் டைரக்டரான விவேக் கிருஷ்ணானியை சந்தித்து இதுகுறித்து ஒப்பந்தம் போட்டுவிட்டு திரும்பியுள்ளார் பிருத்விராஜ்.