தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
படத்துக்கு படம் வித்தியாசமான கேரக்டர்களில் நடிப்பது என்றால் மலையாள திரையுலகை பொறுத்தவரை மோகன்லால், திலீப்புக்கு அடுத்ததாக நடிகர் ஜெயசூர்யா முன்னிலை வகிக்கிறார் என்று சொல்லலாம். தற்போது தனது ஆஸ்தான இயக்குனரான ரஞ்சித் சங்கரின் டைரக்சனில் 'ஞான் மேரிக்குட்டி' என்கிற படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப்படத்தில் ஆணாக இருந்து பெண்ணாக மாறும் கேரக்டரில் ஜெயசூர்யா நடிக்கிறார் என சொல்லப்பட்டு வந்தது. தற்போது வெளியாகியுள்ள இந்தப்படத்தின் டீசர் அதை உண்மை என நிரூபித்துள்ளது. டீசரில் தாடி வைத்துள்ள சூர்யா கண்ணாடியில் முகம் பார்க்கும்போது தன்னை பெண்ணாக உணர்வது போல வெளியாகியுள்ள இந்த டீசர் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.