தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
புலி முருகன் படத்தின் சண்டைக்காட்சிகள் மூலம் மிரட்டியதை தொடர்ந்து மோகன்லால் படங்களின் ஆஸ்தான சண்டை பயிற்சி இயக்குனராகவே மாறிவிட்டார் பீட்டர் ஹெய்ன் மாஸ்டர். தற்போது மோகன்லால் நடிப்பில் உருவாகி வரும் 'ஒடியன்' படத்திற்கும் இவர்தான் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார்.
தற்போது நடைபெற்று வரும் இந்தப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் மோகன்லாலின் இளம் வயது காட்சிகள், அதிலும் குறிப்பாக ஆக்சன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. புலி முருகன் படத்தில் சண்டைக்காட்சிகள் பேசப்பட்டது போல 'ஒடியன்' படமும் தனக்கு இன்னொரு பெயர் சொல்லும் படமாக இருக்க வேண்டும் என பம்பரமாக சுழன்று வருகிறாராம் பீட்டர் ஹெய்ன்.
இந்தப்படத்திற்காக நாளொன்றுக்கு 3 லட்சம் ரூபாய் வீதம் 50 நாட்களுக்காக சுமார் ஒன்றரை கோடி ரூபாய் பீட்டர் ஹெய்னுக்கு சம்பளமாக பேசப்பட்டுள்ளதாம்.