'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகி வரும் படம் மகாநதி. இந்த படம் தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரில் வெளியாகிறது. சாவித்ரி வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க, நிருபர் வேடத்தில் சமந்தாலும், ஜெமினியாக துல்கர் சல்மானும், கதை வசனகர்த்தா அலுரி சக்ரபாணி ரோலில் பிரகாஷ்ராஜூம், எஸ்.வி.ரங்காராவ் வேடத்தில் மோகன்பாபுவும் நடிக்கிறார்கள்.
இவர்களைத் தொடர்ந்து சாவித்ரியுடன் சில தெலுங்கு படங்களில் நடித்துள்ள என்.டி.ராமாராவ், நாகேஸ்வரராவ் ஆகியோரின் கதாபாத்திரங்களும் இந்த படத்தில் இடம் பெறுகிறது. இதில் என்டிஆர் வேடத்தில் நடிக்க ஜூனியர் என்டிஆரிடம் பேசி வரும் மகாநதி பட டைரக்டர் நாக் அஸ்வின், நாகேஸ்வரராவ் வேடத்தில் நடிக்க அவரது பேரனான நாக சைதன்யாவை ஒப்பந்தம் செய்துள்ளார்.