இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தாகத்தில் தவித்தனுக்கு கண்ணில் தென்பட்டதெல்லாம் கானல் நீர் என்கிற நிலையில் தான் இருக்கிறார் ஜெயராமின் மகன் காளிதாஸ். தமிழில் இவர் நடித்த ஒரு பக்க கதை படம் தயாராகி சில வருடங்கள் ஆகியும் இன்னும் ரிலீஸை நோக்கி நகராமல் நிற்கிறது.
அதேபோல மலையாளத்தில் முதன்முதலாக அறிமுகமாகியுள்ள 'பூமரம்' படமும் தயாராகி ஒரு வருடத்திற்கு மேலாகியும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படுவதும் பின் மாற்றப்படுவதும் வாடிக்கையாகி விட்டது..
இறுதியாக வரும் மார்ச்-9ஆம் தேதி பூமரம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டதால் சந்தோஷமாக இருந்தார் காளிதாஸ் ஜெயராம். இதோ இப்போது சில காரணங்களுக்காக மீண்டும் தேதி அறிவிக்கப்படாமல் ரிலீஸை தள்ளி வைத்துள்ளார்கள்.
இருந்தாலும் விரைவில் இந்தப்படம் வெளியாகும் என விரக்தி மேலிட தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார் காளிதாஸ் ஜெயராம்.