தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பிரபல மலையாள இயக்குனர் பிளஸ்சிக்கு மட்டுமல்ல, நடிகர் பிருத்விராஜூக்கும் கனவுப்படம் என்று சொல்லப்படும் படம் 'ஆடுஜீவிதம்'. கடந்த மூன்றாண்டுகளாக பேச்சுவாக்கிலேயே இருந்த இந்தப்படம் கடந்த ஒரு மாதமாக வேகம்பெற்று, நட்சத்திர தேர்வை நடத்த ஆரம்பித்தது. அமலாபால் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு நயன்தாராவின் சொந்த ஊரான திருவல்லாவில் இன்று பூஜையுடன் துவங்கியுள்ளது. இதில் பிருத்விராஜ், அமலாபால் இருவரும் கலந்து கொண்டனர்.
இந்தப்படத்தை பொறுத்தவரை கேரளாவில் நாற்பது சதவீத காட்சிகள் மட்டும் தான் படமாக்கப்பட இருக்கின்றன. மற்றபடி அரபு நாடுகளில் ஒட்டகம் மேய்க்க சென்ற சாதாரண இளைஞனின் கஷ்ட ஜீவனத்தை சொல்லும் படம் என்பதால் இதன் பெரும்பகுதி படப்பிடிப்பு அரபு நாடுகளில் தான் நடைபெற இருக்கிறது.