பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
போலீஸ் அதிகாரியாக தொடர்ந்து நடித்து வரும் மம்முட்டி, அரசியல் சார்ந்த படங்களில் நடித்து வெகு நாளாகி விட்டது. அந்தக்குறையை போக்கும் விதமாக தற்போது தான் நடித்து வரும் 'பரோல்' படத்தில் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த போராளியாக நடித்துள்ளார் மம்முட்டி. போராட்டம் நடத்தியதால் சிறையில் அடைக்கப்படும் மம்முட்டி பரோலில் வெளிவந்த பின்னர் என்ன நடக்கிறது என்பது தான் படத்தின் கதை.
அதேபோல 'முன்னறியிப்பு' படத்தை தொடர்ந்து இதில் மீண்டும் சிறைக்கைதியாக நடித்திருக்கிறார் மம்முட்டி. பேமிலி த்ரில்லராக உருவாகியுள்ள இந்தப்படத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக இனியா நடிக்க, மம்முட்டியின் தங்கையாக நடித்துள்ளார் மியா ஜார்ஜ்.
மார்ச்-3௦ஆம் தேதி வெளியாகவுள்ள இந்தப்படத்தை சரத் சந்தித் என்கிற அறிமுக இயக்குனர் இயக்கியுள்ளார்.