'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மலையாளத்தில் பிரேமம், தமிழில் கொடி படங்களில் நடித்தவர் அனுபமா பரமேஸ்வரன். பிரேமம் தெலுங்கு ரீமேக்கில் நடித்த அனுபமா, அதன்பிறகு அங்கு பிசியான நடிகையாகி விட்டார். பல தெலுங்கு படங்களில் நடித்திருப்பவர், தற்போது நானி நடித்து வரும் கிருஷ்ணார்ஜூனா யுத்தம் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
அதன்பிறகு ஏ.கருணாகரன் இயக்கும் படத்தில் சாய் தரம் தேஜ்க்கு ஜோடியாக நடிக்கிறார் அனுபமா. இந்த படத்தில் அனுபமாவை மையப்படுத்திதான் கதை பின்னப்பட்டுள்ளதாம். அதாவது, பிடா படத்தில் சாய் பல்லவி நடித்தது போன்ற அழுத்தமான வேடத்தில் நடிக்கிறார் அனுபமா பரமேஸ்வரன். ஆக, இந்த படத்திற்கு பிறகு தெலுங்கு சினிமாவில் ஒரு பெரிய இடத்தை அனுபமா பிடித்து விடுவார் என்கிறார்கள்.