ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சமீபத்தில் நிவின்பாலி, த்ரிஷா நடிப்பில் மலையாளத்தில் 'ஹே ஜூடு' என்கிற படம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. ஷ்யாம் பிரசாத் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்திற்கும் நிவின்பாலியின் நடிப்பிற்கும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார் நடிகரும் இயக்குனருமான பிரதாப் போத்தன்.
மேலும் இந்தப்படத்தின் வெற்றி தனக்கு மகிழ்ச்சி கலந்த வருத்தம் தருவதாகவும் கூறியுள்ளார். அதற்கான காரணத்தையும் அவரே குறிப்பிட்டுள்ளார். அதாவது இந்தப்படம் ஆரம்பித்தபோது இதில் த்ரிஷாவின் தந்தையாக நடிக்க ஒப்பந்தமானவர் பிரதாப் போத்தன் தானாம்.
ஆனால் கோவாவிற்கு படப்பிடிப்பிற்காக சென்றபோது அவரது உடல்நிலை சரியில்லாமல் போகவே, அவரால் இந்தப்படத்தில் நடிக்க முடியாமல் போனதாம்.. ஒரு நல்ல படத்தில் தன்னால் இடம்பெறமுடியாமல் போனதே என்பதுதான் பிரதாப் போத்தனின் வருத்தமாம்.