600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
நார்த் அமெரிக்கா பிலிம் அவார்ட்ஸ் (NAFA) என்கிற விருதுகள் ஆண்டுதோறும் வெளியாகின்ற சிறந்த மலையாள சினிமாவுக்கும், அதில் பங்குபெற்ற சிறந்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் வழங்கப்பட்டு வருகின்றன..
இந்த விருதுகளுக்கான வெற்றியாளர்களை வட அமெரிக்காவில் வசிக்கும் மலையாளிகள் ஆன்லைன் சர்வே மூலமாக ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுக்கிறார்கள். அந்தவகையில் இந்த ஆண்டு விருது பெற்றவர்கள் பட்டியலையும் அறிவித்துவிட்டார்கள். விருதுபெற்றவர்களின் விபரம் பின் வருமாறு...
சிறந்த படம் : தொண்டிமுதலும் திரிக்சாட்சியும்
2வது சிறந்த படம் : மாயநதி
சிறந்த படம் (பாப்புலர்) : டேக் ஆப்
சிறந்த சமூகநோக்கிலான படம் : உதாகரணம் சுஜாதா
சிறந்த இயக்குனர் : லிஜோ ஜோஸ் பெல்லிசெரி (அங்கமாலி டைரீஸ்)
சிறந்த நடிகர் : துல்கர் சல்மான் (சோலோ & பறவ)
சிறந்த நடிகர் (critics) : பஹத் பாசில் (தொண்டிமுதலும் திரிக்சாட்சியும்)
சிறந்த நடிகை : மஞ்சு வாரியார் (உதாகரணம் சுஜாதா)
சிறந்த நடிகை (critics) : பார்வதி (டேக் ஆப்)
சிறந்த நடிகை (outstanding performance) : ஐஸ்வர்ய லட்சுமி (மாயநதி)
சிறந்த துணை நடிகர் : அலான்சியர் லே (தொண்டிமுதலும் திரிக்சாட்சியும்)
சிறந்த துணை நடிகை : சாந்தி கிருஷ்ணா (நண்டுகளுடே நாட்டில் ஓரிடவேள)
சிறந்த குணச்சித்திர நடிகர் : சுராஜ் வெஞ்சாரமூடு (தொண்டிமுதலும் திரிக்சாட்சியும்)
சிறந்த குணச்சித்திர நடிகை : சுரபிலட்சுமி (மின்னாமினுங்கு)
சிறந்த அறிமுக இயக்குனர் : சௌபின் சாஹிர் (பறவ)
யூத் ஐகான் : டொவினோ தாமஸ்
ஜனப்ரிய நாயகன் : குஞ்சாக்கோ போபன்
சிறந்த வில்லன் : ஜோஜூ ஜார்ஜ்
சிறந்த நகைச்சுவை நடிகர் : ஹரீஷ் பெருமுன்னா
சிறப்பு ஜூரி விருது : நீரஜ் மாதவ் (பைப்பின் சுவட்டிலே பிரணயம்)
சிறந்த ஒளிப்பதிவாளர் : மது நீலகண்டன் (ராமன்டே ஈடன் தோட்டம், உதாகரணம் சுஜாதா)