மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் |
ராம்சரண் - சமந்தா நடித்துள்ள படம் ரங்கஸ்தலம். 1980களில் நடக்கும் கதையில் உருவாகியுள்ள இந்த படம் கிராமத்து கதையில் உருவாகியிருக்கிறது. அதனால் அந்த காலகட்டத்து கெட்டப்புக்கு மாறி ராம்சரணும், சமந்தாவும் நடித்த புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளன.
சுகுமார் இயக்கியுள்ள இந்த படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்காக வழக்கமான பாணியில் இருந்து மாறி கிராமிய இசையில் பாடல்களை கொடுத்துள்ளார் அவர். இப்படத்தில் ராம்சரண் இடம்பெறும் டீசர் வெளியானதை அடுத்து சமந்தா இடம்பெற்ற டீசரும் வெளியானது. அந்த டீசருக்கு ராம்சரண் வாய்ஸ் கொடுத்திருந்தார். ராம்சரண் டீசரைப்போலவே சமந்தா இடம்பெற்ற ரங்கஸ்தலம் டீசருக்கும் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்த நிலையில், பிப்ரவரி 14-ந்தேதி காதலர் தினத்தை முன்னிட்டு ஒருநாள் முன்னதாக அதாவது பிப்ரவரி 13ந்தேதி அன்று ரங்கஸ்தலம் படத்தில் ராம்சரண்-சமந்தா இடம்பெறும் காதல் பாடல் ஒன்று வெளியாக உள்ளது.