மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
மலையாள சினிமாவில் கெட்டப் மாற்றி நடிப்பதில் முதலிடம் நடிகர் திலீப்புக்குத்தான். ஏற்கனவே சாந்துப்பொட்டு, குஞ்சுக்கூனன், பச்சகுதிர, சவுன்ட் தோமா, மாயமோகினி, கல்யாணராமன் என நிறைய படங்களில் வித்தியாசம் காட்டி நடித்தவர் திலீப்.
இப்போது தான் நடித்து வரும் கம்மார சம்பவம் என்கிற படத்தில் 90 வயது கிழவராக நடித்துள்ளார் திலீப். மூன்றுவித காலகட்டத்தில் நடக்கும் இந்தப்படத்தில் இவர் ஏற்று நடித்துள்ள மூன்று கெட்டப்புகளில் இதுவும் ஒன்று.
இதேபோல இதில் நடித்துள்ள நடிகர் சித்தார்த்துக்கும் மூன்று கெட்டப் உண்டு என்றும் சொல்லப்படுகிறது. ரதீஷ் அம்பாட் என்பவர் இந்தப்படத்தை இயக்கி வருகிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பில் பாதி தமிழ்நாட்டில் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.