ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் |
நிவின்பாலி நடிப்பில் கிரிக்கெட் பின்னணியில் உருவான '1983', மஞ்சு வாரியர் நடிப்பில் வாலிபால் பின்னணியில் உருவான 'கரிங்குன்னம் சிக்சஸ்' படங்களை தொடர்ந்து புட்பால் பின்னணியில் உருவாகியுள்ள படம் தான் கேப்டன்..
கேரளாவின் மறைந்த முன்னாள் புட்பால் விளையாட்டு வீரரான வி.பி.சத்யன் என்பவரது வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப்படத்தில் 'கேப்டன்' ஆக ஜெயசூர்யா நடித்துள்ளார். இயக்குனர் பிரஜேஷ் சென் இயக்கியுள்ள இந்தப்படம் இதுவரை ஜெயசூர்யா நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகியுள்ளதாம்.
வரும் பிப்-16ஆம் தேதி இந்தப்படம் வெளியாக இருக்கிறது. சமீபகாலமாக தொடர் வெற்றிகளை பெற்றுவரும் ஜெயசூர்யாவுக்கு இந்தப்படமும் மகுடம் சூட்டும் என எதிர்பார்க்கலாம்.