'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பாபநாசம் படத்தில் கமலின் மகளாக நடித்தவர் நிவேதா தாமஸ். அதன்பிறகு தெலுங்கிற்கு சென்றவர் ஜென்டில்மேன், நின்னுகோரி, ஜெய்லவ குசா ஆகிய படங்களில் நடித்து முன்னணி நடிகையாகி விட்டார்.
இந்த நிலையில், ஜெய்லவகுசா படத்தில் நடித்த பிறகு நடித்துக்கொண்டே படிப்பையும் தொடர்ந்து வருவதால், தற்போது தேர்வுக்கு தயாராகிக்கொண்டிருக்கிறேன். அதனால் தேர்வெழுதி முடிக்கிறது வரை எந்தப டத்திலும் கமிட்டாக மாட்டேன் என்று செய்தி வெளியிட்டிருந்தார் நிவேதா.
ஆனால், சமீபத்தில் தேர்வு எழுதி முடித்து விட்ட நிவேதா தாமஸ், ரவிதேஜா மூன்று வேடங்களில் நடிக்கும் அமர் அக்பர் அந்தோணி படத்தில் கமிட்டாகியிருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால் சில தினங்களுக்கு முன்பு டுவிட்டரில் தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த நிவேதா தாமஸ், ரவிதேஜாவுடன் நடிப்பது பற்றி ஒரு ரசிகர் கேள்வி கேட்டபோது, அந்த செய்தி உண்மையில்லை என்று மறுத்துள்ளார். ஜூனியர் என்டிஆருடன் நடித்த ஜெய்லவகுசாவிற்கு பிறகு இன்னும் எந்த படத்திலும் நான் கமிட்டாகவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.