இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தமிழில் வெளியான 'அவள்' படத்தின் கௌரவமான வெற்றியை தொடர்ந்து சித்தார்த் தற்போது அதிகம் எதிர்பார்ப்பது மலையாளத்தில் தான் முதன்முதலாக நடித்துள்ள 'கம்மார சம்பவம்' படத்தைத்தான். இந்தப்படத்தின் ஹீரோ திலீப் என்றாலும் அவருக்கு இணையான கதாபாத்திரம் சித்தார்த்திற்கும் வழங்கப்பட்டுள்ளதாம்.
அதாவது, படத்தில் திலீப்பிற்கு மூன்றுவிதமான காலக்கட்டங்களில் மூன்று கெட்டப்பில் நடிக்கும் கதாபாத்திரம். அதேப்போல சித்தார்த்திற்கும் மூன்றுவித கெட்டப்புகள் படத்தில் உண்டு. மேலும் போஸ்டர்களிலும் அவருக்கு சம முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள். ரதீஷ் அம்பாட் என்பவர் இந்தப்படத்தை இயக்கி வருகிறார்.