பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ஹிந்தி நடிகையான ஸ்ரத்தா கபூர், பிரபாஸின் சாஹோ படம் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி, தென்னிந்திய சினிமாவில் கால்பதித்து உள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடக்கிறது. இந்நிலையில் அடுத்தப்படியாக இன்னொரு தெலுங்கு படத்தில் கமிட்டாகி உள்ளதாக கூறப்படுகிறது.
திரிவிக்ரம், ஜூனியர் என்டிஆரை கொண்டு இயக்கும் புதிய படத்தில் ஸ்ரத்தா தான் நாயகியாக நடிப்பார் என தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தில் அனு இம்மானுவலை நடிக்க வைக்க இயக்குநர் முயற்சித்தார், ஆனால் அவர் மறுக்கவே, இப்போது ஸ்ரத்தாவை நடிக்க வைக்க எண்ணி உள்ளாராம். இதுதொடர்பாக அவரிடம் பேசியிருப்பதாகவும், அவரும் சம்மதம் சொல்லியிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இதுப்பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.