மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் |
பாகுபலி-2படத்தில் நடித்து முடித்தபோது அனுஷ்காவை பிரபாஸ் திருமணம் செய்து கொள்கிறார் என்று செய்திகள் வெளியாகின. அதன்பிறகு அந்த செய்தியை அவர்கள் மறுத்தனர். ஆனால் இப்போதுவரை அந்த செய்தி மீடியாக்களில் புகைந்து கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில், தற்போது தன்னுடன் சாஹோ படத்தில் நடித்து வரும் இந்தி நடிகை ஸ்ரத்தா கபூரை இந்த ஆண்டு பிரபாஸ் திருமணம் செய்து கொள்ளயிருப்பதாக பாலிவுட்டில் செய்தி பரவியுள்ளது. இதையடுத்து சமீபத்தில் மும்பையில் ஸ்ரத்தா கபூரை மீடியாக்கள் முற்றுகையிட்டு அந்த செய்தி குறித்து கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.
அதற்கு ஸ்ரத்தா கபூர், இப்படியொரு செய்தியையே மீடியாக்கள் சொல்லித்தான் நான் அறிகிறேன். மற்றபடி பிரபாஸைப்பற்றி சொல்ல வேண்டு மென்றால் அவர் நல்ல நடிகர் மட்டுமின்றி நல்ல மனிதரும்கூட என்று பதிலளித்துள்ளார்.