பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கடந்த 2014-ஆம் வருடத்திலேயே, 'பியூட்டிபுல் கேம்' என்கிற படத்தில் பிருத்விராஜ் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. அதன்பின் சரியாக ஒரு வருடம் கழித்து நடிகர் ஆசிப் அலி இந்தப்படத்தை தயாரிப்பதாக போஸ்டருடன் அறிவிப்பும் வெளியானது.
ஆனால் அதன்பின் படப்பிடிப்பு துவங்குவதற்கான எந்த அறிவிப்பையும் காணோம். இதற்கிடையே நடிகர் ஆசிப் அலி இந்தப்படத்தை தயாரிப்பதில் இருந்து பின் வாங்கிவிட்டதாக அறிவித்தார். இதனால் இந்தப்படம் கைவிடப்பட்டதாகவே கருதப்பட்டது.
இந்தநிலையில் பிருத்விராஜுடன் சமீபத்தில் இந்த கதை பற்றி டிஸ்கஷன் செய்ததாகவும், இந்தப்படத்தில் உறுதியாக நடிப்பதாக பிருத்விராஜ் நம்பிக்கை தந்ததாகவும் இயக்குனர் ஜேம்ஸ் கோட்டக்கல் புகைப்படத்துடன் தகவல் வெளியிட்டுள்ளார்.
புட்பாலை மையமாக வைத்து உருவாகும் இந்தப்படத்தை இயக்குவதன் மூலம் பேஷன் போட்டோகிராபராக இருந்த ஜேம்ஸ் கோட்டக்கல் இயக்குனராக மாறியுள்ளார். அவருக்கு துணையாக அஜய்குமார் என்பவர் அறிமுக கதாசிரியராக களம் இறங்குகிறார்.