'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மோகன்லால் தற்போது நடித்துவரும் 'ஒடியன்' படத்தின் படப்பிடிப்பிறகு சற்றே பிரேக் விடப்பட்டிருக்கிறது. அதனால் தனது புதிய படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள மும்பை கிளம்பிவிட்டார். இந்த தகவலை தானே வெளியிட்டதுடன் தனது அசத்தலான பர்ஸ்ட் லுக் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு மோகன்லால் இல்லாமலேயே இந்தப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி நடைபெற்று வருகிறது. பாலிவுட்டை சேர்ந்த விளம்பரப்பட இயக்குனரான அஜய் வர்மா என்பவர் இந்தப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.
முழுக்க முழுக்க கமர்ஷியல் ஆக்சன் படமாக உருவாகும் இந்தப்படத்துக்கு சஜூ தாமஸ் என்பவர் கதை எழுதியுள்ளார். தமிழில் 'நிமிர்' படத்தை தயாரித்துள்ள சந்தோஷ் குருவில்லா தான் இந்தப்படத்தையும் தயாரிக்கிறார்.