ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் |
நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகி வரும் படம் மகாநதி. நாக் அஸ்வின் இயக்கி வரும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், துல்கர் சல்மான், சமந்தா, மோகன்பாபு உள்பட பலர் நடிக்கிறார்கள். இந்த நிலையில் சில தெலுங்கு படங்களில் என்டிஆருடன் இணைந்து சாவித்ரி நடித்திருப்பதால் என்டிஆர் சம்பந்தப்பட்ட காட்சிகளும் இந்த கதையில் இடம் பெற்றிருக்கிறாம். அதனால் என்டிஆர் வேடத்தில் யாரை நடிக்க வைக்கலாம் என்கிற பரிசீலனை நடந்து வந்தது.
அதையடுத்து அந்த வேடத்தில் நடிக்க என்டிஆரின் பேரனான ஜூனியர் என்டிஆரை அணுகினர். ஆனால் படத்தில் சிறிது நேரமே வரும் கதாபாத்திரம் என்பதால் அவர் நடிக்க மறுத்து விட்டார். அதையடுத்து இப்போது மகாநதியில் என்டிஆர் வேடத்தில் நடிக்க நானியிடம் பேசியுள்ளார்கள். என்டிஆர் வேடம் என்பதால் அந்த வேடத்தில் நடிக்க நானி ஓகே சொல்லி விட்டதாக டோலிவுட்டில் செய்திகள் வெளியாகியுள்ளன.