ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ் டைரக்சனில் மலையாளத்தில் உருவாகிவரும் படம் 'காயம்குளம் கொச்சுன்னி'. நிவின்பாலி கதாநாயகனாக நடிக்கும் இந்தப்படத்தில் மோகன்லால் முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளார். கேரளாவில் எண்பதுகளில் நிஜமாகவே ராபின் ஹூட் போலவே வாழ்ந்த திருடன் 'காயம்குளம் கொச்சுண்ணி' கேரக்டரில் நிவின்பாலி நடிக்கிறார்.
கதாநாயகியாக பிரியா ஆனந்த் நடிக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு மங்களூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்தநிலையில் படப்பிடிப்பின்போது ஏற்பட்ட எதிர்பாராத விபத்தில் இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ் காயமடைந்ததால் தற்போது படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. சிறிய காயங்கள் தான் என்றாலும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக இயக்குனரை சேர்த்துள்ளார்கள் என்று சொல்லப்படுகிறது.